விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-05-17 20:01 GMT

சிவகாசி

சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு:-

வேளாண் அலுவலகத்தில் தார்பாய் வாங்கும்போது கடப்பாரை, மண் வெட்டி ஆகியவைகளை கட்டாயம் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தும் நிலை உள்ளது. விழுப்பனூர் கண்மாயில் உரிய அனுமதி பெற்று வண்டல்மண் அள்ளிய போது அங்கு வந்த அதிகாரி, டிராக்டரை பறிமுதல் செய்கிறார். ஆனால் அனுமதியின்றி செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளும்போது கண்டுகொள்வதில்லை. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்களில் செங்கல்சூளைகளுக்கு மண் அள்ளப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு விவசாயிகள் கோரிக்கைகளை முன் வைத்தனர். கண்மாய்களில் இருந்து மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது என்று கூறி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்