விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.;

Update: 2022-12-22 19:00 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடம், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, விவசாய கடன் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்