விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
சாத்தூாில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூரில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் அனிதா தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரசேகரன், ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி, சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் ராம்குமார் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கையேடுகளை கோட்டாட்சியர் விவசாயிகளுக்கு வழங்கினார். இதில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, சாத்தூர், வெங்கடாசலபுரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.