விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 23-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.