விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது

Update: 2023-04-17 19:30 GMT


விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளவரும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் ஆகிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்