காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ளது.;

Update:2023-09-26 16:00 IST

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்