ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை விவசாயிகள் இணைக்க அஞ்சலகங்களை அணுகலாம்

ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை விவசாயிகள்இணைக்க அஞ்சலகங்களை அணுகலாம்என திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்து உள்ளார்.

Update: 2022-09-10 17:48 GMT

ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை விவசாயிகள்இணைக்க அஞ்சலகங்களை அணுகலாம்என திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஆண்டொன்டிற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பி.எம்.கிசான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்று கூறப்பட்டு உள்ளதால் விவசாயிகள் அவர்கள் பகுதியில் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களை அணுகி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை உடனடியாக இணைத்து பயன் பெற வேண்டும். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இவ்வாறு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு https://pmkisan.gov.in/aadharekyc.apx என்ற பி.எம். கிஷான் இணைய தளம் அல்லது பி.எம்.கிசான் செயலியில் ஆதார் எண்ணுடன் வரும் ஓ.டி.பி. அங்கீகாரத்தை பயன்படுத்தி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 26 ஆயிரத்து 834 பயனாளிகள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டி இருப்பதாக அறியப்பட்டு உள்ளது. இதற்காக திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் திருவண்ணாமலை அஞ்சல் கோட்டமும் அதன் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியும் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்