மானிய விலையில் பவர் டில்லர் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மானிய விலையில் பவர் டில்லர் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-07 17:59 GMT

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், வேளாண் எந்திரமயமாக்கல் திட்டம் 2022-23-கீழ் உழவு பணிகளுக்கு பவர் டில்லர் 2-வது தவணையாக பொதுப்பிரிவினருக்கு 20, மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 6 என அரசிடமிருந்து ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

சிறு,குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி. ஆகிய விவசாயிகளுக்கு பவர் டில்லர் வாங்க 50 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மேற்படி பவர் டில்லர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் விருப்பமுள்ள விவசாயிகள் மானியம் பெற சிட்டா அடங்கல், சிறு, குறு விவசாய சான்று, ஆதார் அட்டை நகல், பவர்டில்லர் எந்திரத்தின் விலைப்புள்ளி, வங்கக்கணக்கின் முதல் பக்கம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளாயிருப்பின் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் உதவி செயற்பொறியாளர், புதுப்பேட்டை ரோடு, சிவசக்தி நகர், திருப்பத்தூர் - 635601 என்ற அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்