காரைக்குடி பகுதியில் ஒரு மணி நேரம் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

காரைக்குடி பகுதியில் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-09-14 19:00 GMT


காரைக்குடி பகுதியில் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழை

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மட்டும் மாலை நேரங்களில் மட்டும் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 6 மணிக்கு திடீரென வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது.

பின்னர் சிறிது நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மின் இணைப்பு

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த பலத்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் தேங்கி இருந்த மழைநீரில் வாகனங்கள் ஊா்ந்தபடி சென்றன. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் மின்வாரிய அதிகாரிகள் விரைவாக வந்து மின்இணைப்பு வழங்கினர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும் நகரில் பல்வேறு பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை ஏற்பட்டதால் பொதுமக்கள் மின்சாதன பொருட்களை இயக்கமுடியாமல் சிரமப்பட்டனர். காரைக்குடி பகுதியில் பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்