குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

Update: 2022-06-20 18:13 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறுவை சாகுபடி பணிகள்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 50 ஆயிரம் ஏக்கரில் வேளாண் சார்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வந்தனர். கடந்த மாதம் (மே) 24-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு 17,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் நடைபெற்றது.

தற்போது நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 23 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகி்ன்றனர்.

நீடாமங்கலம் தாலுகா பகுதியில் 6 ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீரில் மின் மோட்டாரை பயன்படுத்தி கோடை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

களை எடுக்கும் பணி

இந்தநிலையில் கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர், காளாச்சேரி, மேலபூவனூர், கானூர், ஒரத்தூர், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் உள்ள வயல்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து வயல்களில் களை எடுக்கும் பணிகளில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மேலும் உரமிடும் பணியும் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்