வாழைக்கன்றுகளை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வாழைக்கன்றுகளை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-14 20:01 GMT

திருவையாறு:-

ஏப்ரல் மாதத்துக்குள் வழங்கப்பட வேண்டிய பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காலதாமதத்துக்கு உரிய வட்டியை காப்பீட்டு தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும். வாழை பயிருக்கான காப்பீடு பிரீமிய தொகையை குறைத்து வசூலிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் காப்பீடு நிறுவனத்தின் பகுதி அலுவலகத்தை திறக்க வேண்டும். இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு தொடக்க வங்கி முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கையில் வாழைக்கன்றுகளை ஏந்திக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயி ராஜ்மோகன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் சின்னதுரை, சுந்தரவடிவேல், சுகுமாறன், சம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்