விஷம் குடித்து விவசாயி தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தாலுகா ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவருடைய மகன் அருண்குமார் (வயது 24). விவசாயி. சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.