சின்னசேலம் அருகேவிவசாயி தற்கொலை
சின்னசேலம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள சிறுமங்கலம் கிராமம் வடக்கு காட்டுகொட்டாயை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சீனிவாசன் (வயது 45). விவசாயி. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காலில் அடிப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், வலி தாங்க முடியாமல் 2 நாட்களுக்கு முன்பு விஷத்தை எடுத்து குடித்தார்.
இதில் மயங்கி விழுந்து கிடந்த சீனிவாசனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் மணி கீழ்குப்பம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.