கீரனூர் அருகே உள்ள தவளைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவருடைய மகன் பார்த்திபன் (வயது 32), விவசாயி. இவருக்கு காது சரிவர கேட்காது என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தண்டவாளத்தை பார்த்திபன் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி பார்த்திபன் உடல் சிதைந்து பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.