சின்னசேலத்தில் நடந்த சாலை விபத்தில் விவசாயி பலி
சின்னசேலத்தில் நடந்த சாலை விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 50), விவசாயி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சின்னசேலத்தில் இருந்து நயினார்பாளையம் நோக்கி புறப்பட்டார். தில்லை நகர் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.