ஊத்தங்கரை:-
ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே சாமகவுண்டன்வலசை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 35). விவசாயி. இவர் மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் சிங்காரப்பேட்டை- திருப்பத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.