கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே தியாகை மதுரா கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 53). விவசாயியான இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் தியாகதுருகம் சென்று விட்டு அங்கிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சின்னமாம்பட்டு பிரிவு சாலையை கடந்த போது புதுச்சேரியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் கவியரசன் கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் ஈரோடு அருகே ரங்கம்பாளையம் கந்தன் நகர் பகுதியை சேர்ந்த அங்குராஜ்(46) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.