மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி சாவு

மானூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி இறந்தார்.

Update: 2023-05-31 19:29 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள வல்லவன் கோட்டையைச் சேர்ந்தவர் கொம்பன் (வயது 66). விவசாயி. இவர் கடந்த 25-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் கீழக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நாஞ்சான்குளம் பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த கொம்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி பெற்று பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவா் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மகராஜன் (32) கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்