ஆனைமலை
ஆனைமலை அருகே உள்ள எஸ்.நல்லூர் மேற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 30). விவசாயி. இவர் சொந்தமாக தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் அருண்குமார் நேற்று வழக்கம்போல் கிணற்றில் இருந்து தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டார் சுவிட்ச்சை போட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின் கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது, அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.