பள்ளிபாளையம்
மொளசி அருகே வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது56). விவசாயி. இவர் நேற்று காலை தனது மொபட்டில் கொக்கராயன்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கொக்கராயன்பேட்டையில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மொளசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ரவிக்கு சுமதி என்ற மனைவியும், 14 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர்.