கார் மோதி விவசாயி சாவு

கார் மோதி விவசாயி சாவு

Update: 2023-03-27 18:45 GMT

தஞ்சை அருகே உள்ள பூதலூர் பாலாயி வயல் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது64). விவசாயி. நேற்றுமுன்தினம் இவர் செங்கிப்பட்டியில் இருந்து தனது சொந்த ஊருக்கு தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பூதலூர் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக அண்ணாதுரை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்