கார் மோதி விவசாயி சாவு

பெரியகுளம் அருகே கார் மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-12-19 19:00 GMT

பெரியகுளம் அருகே உள்ள எ.காமாட்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுருளி (வயது 48). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வேல்நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஏ.டி.எம். கார்டை மறந்து விட்டு வந்ததால் அதனை எடுப்பதற்கு வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளை திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுருளியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த ஆனந்தராஜா (39) என்பவர் மீது பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்