கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-21 19:01 GMT

விவசாயி

நாமக்கல் அருகே உள்ள விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சி ராசகவுண்டனூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 73). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், தனது தங்கை துளசியம்மாள், என்பவர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு வெளியே சென்ற கணேசன் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் எங்கும் காணவில்லை. சந்தேகம் அடைந்த துளசியம்மாள் பக்கத்தில் உள்ள கிணற்றுக்கு சென்று பார்த்தார். அப்போது கிணற்றில், தனது அண்ணன் கணேசன் அணிந்து இருந்த காலணி மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படைவீரர்கள் வந்து, பாதாள சங்கிலி மூலம் தேடி பார்த்தனர்.

சாவு

அதில் கணேசன் கிணற்று தண்ணீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது. மயக்க நிலையில் இருந்த அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்