மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ஆரணி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
ஆரணி
ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உலகநாதன் (வயது 68), விவசாயி. இவர் கடந்த 21-ந் தேதி மாலை விவசாய நிலத்துக்கு சென்று இருந்தார்.
அங்கு மின்சாரம் தாக்கியபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்ததால் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் உலகநாதனின் மகன் பூபாலன் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் உலகநாதன் மின்சாரம் தாக்கி இறந்தது எப்படி? விவசாய நிலத்திற்கு எலிக்காக வைத்த மின்சார வேலியில் சிக்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.