பண்ருட்டி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
பண்ருட்டி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 38). விவசாயி இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்கிற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சர்க்கரை நோயினால் அவதிப்பட்ட அசோக் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பிற்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அசோக் உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.