விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

ஆரணி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-28 10:03 GMT

ஆரணி

ஆரணி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைய நாதன் (வயது 55). விவசாயி. அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மலைய நாதன் நேற்று முன்தினம் மாலை விவசாய நிலத்தின் அருகில் இருந்த மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் மகன் பூபதி புகார் அளித்தார். அதன்பேரில ஆரணி தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த மலையநாதனுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்