விஷ இலையை தின்று விவசாயி தற்கொலை

விஷ இலையை தின்று விவசாயி தற்கொலை செய்துகொண்டார்

Update: 2023-01-28 21:17 GMT

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் சத்தியேந்திரன் (வயது 55).விவசாயி.இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்த நிலையில் குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்து உள்ளார். இந்த நிைலயில் சத்தியேந்திரன் விஷ இலையை தின்று மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்