விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-27 19:35 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 42). விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்றுவலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்