முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் காசடிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் வீரையன் (வயது60). விவசாயியான இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி நோய் இருந்து வந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் கடும் மன உளைச்சலில் இருந்த வீரையன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரையன் நேற்று இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வீரையன் மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.