விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சின்னசேலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் மேற்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 50) விவசாயி, இவருக்கும் இவரது தம்பி பெரியசாமி என்பவருக்கும் இடையே பூர்வீக நிலத்தை பாகபிரிவினை செய்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் பாகபிரிவினை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த செல்லப்பன், விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.