விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சங்கராபுரம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 68). விவசாயியான இவருக்கும், இவரது மகன் வாஞ்சிநாதன்(39) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்த பாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.