கஞ்சா சாகுபடி செய்து விற்பனை விவசாயி கைது
கல்வராயன்மலையில் கஞ்சா சாகுபடி செய்து விற்பனை விவசாயி கைது மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலையில் பெரியபலாப்பூண்டி மலை கிராமத்தில் விவசாயி ஒருவர் விளை நிலத்தில் கஞ்சா சாகுபடி செய்து விற்பனை செய்து வருவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில், மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனயத்பாஷா மற்றும் போலீசார் பெரியபலாப்பூண்டி கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாலகிருஷ்ணன் என்பவர் அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிடப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.