வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி கைது

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-23 19:45 GMT

கன்னங்குறிச்சி:-

கன்னங்குறிச்சி கொத்துக்காரன் சமாதி பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 51). விவசாயி. இவர் தீபாவளிக்கு குடிப்பதற்காக வீட்டில் சாராயம் காய்ச்சி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் நடேசன் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய கியாஸ் சிலிண்டர் உள்பட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்