சிறார்கள் குற்றம் அதிகரிக்க குடும்ப வறுமை, பொருளாதார நிலையே காரணம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சிற்பி' திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

Update: 2022-09-14 05:53 GMT

சென்னை,

சிறார் குற்றசெயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் 'சிற்பி' என்னும் புதிய திட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சிறார்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் 'சிற்பி' திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் கொண்டு வரப்பட்டது

பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) போல் காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 8-ம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீருடையும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ;

மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிற்பி திட்டத்தை தமிழக காவல்துறை முன்னெடுத்துள்ளது.சிறார் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.சிறார்கள் குற்றம் அதிகரிக்க குடும்ப வறுமை, பொருளாதார நிலையே காரணமாக உள்ளது.சுய ஆளுமை திறன், பெற்றோர் பேச்சை மதித்து நடப்பது உள்ளிட்ட பண்புகளை உருவாக்க வேண்டும்.

காவல்துறை மக்களின் நண்பன் என்று சொல்லும் வேளையில், மக்களும் காவல்துறையின் நண்பனாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். காவல்துறையும், மக்களும் இணைந்து செயல்பட்டால் குற்றங்களே இருக்காது என்றார்.

காவல்துறைக்கும், மக்களுக்கும் பாலமாக சிற்பி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டமே சிற்பி. ரூ.4.25 கோடி செலவில் சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறுவர்களை பொது ஒழுக்கம், சமூகப்பொறுப்பு உடையவர்களாக உருவாக்கும் முயற்சியே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்