தொடர் மழை காரணமாக கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு

கொல்லிமலையில் தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது.;

Update:2022-09-05 22:52 IST

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது.

அதன்படி கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற ஆகாய கங்ைக நீர்வீழ்ச்சியில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பயங்கர சத்தத்துடன் கொட்டுகிறது. சுமார் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.

தடை நீடிப்பு

இந்த தடை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு குறையும் வரை நீடிக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் தொடர் மழையின் காரணமாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிகட்டுகள் பாசி பிடித்த நிலையில் காணப்படுகிறது. இதனால் படிகட்டுகளில் சென்றால் வழுக்கி விழுந்து காயம் அடையும் அபாய நிலை உள்ளது உள்ளது. எனவே படிகட்டுகளில் படிந்துள்ள பாசியை உடனடியாக அகற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்