கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
நெல்லை அருகே கோஷ்டி மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் சக்தி ஆகிய இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறால் முன் விரோதம் உருவானது. இந்தநிலையில் சம்பவத்தன்று குறிச்சி பஸ்நிறுத்தம் அருகே மீண்டும் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சக்தி மற்றும் செல்வம் ஆகியோர் தனித்தனியே புகார் தெரிவித்தனர். செல்வம் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சக்தி அளித்த புகாரில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.