ராசிபுரம் போலீசார் சார்பில்மாணவ-மாணவிகளுக்கு கண் பரிசோதனை

Update: 2023-08-05 18:45 GMT

ராசிபுரம்

ராசிபுரம் போலீசார் சார்பில் சிறுவர் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவம் மற்றும் தோல் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மன மகிழ் மன்றத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கண் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதற்கானஏற்பாடுகளை ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம் மற்றும் சிவா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்