கண் குறைபாடு நீக்கும் முகாம்
நெல்லை அருகே கண் குறைபாடு நீக்கும் முகாம் நடந்தது.
நெல்லை அருகே உள்ள சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் மாணவர்களுக்கு கண் குறைபாடு நீக்கும் முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கணேசன் முகாமை தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ரெங்கநாதன், நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கணபதி சுப்ரமணியன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் உடையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டனர்.
அரவிந்த் கண் ஆஸ்பத்திரி ஆலோசகர் டாக்டர் ராமகிருஷ்ணன், தலைமை கண் மருத்துவர் மீனாட்சி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் டாக்டர் முகமது யாசர் கண் பரிசோதனை செய்தார்.
நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மரிய கிளின்டன், திட்ட மேலாளர் ஹரிஷ்குமார் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.