தொழிலாளியிடம் பணம் பறிப்பு; 4 பேர் கைது

பாளையங்கோட்டை அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-21 20:16 GMT

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் சீமோல் (வயது 43). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் நொச்சிகுளத்தில் மீன் பிடித்து கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சீமோலிடம் தகராறு செய்து அவரை மிரட்டி மீன் மற்றும் பணத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வி.எம்.சத்திரத்தை சேர்ந்த கந்தசாமி (28), கணேசன் (23), ஆழ்வார்திருநகரியை சேர்ந்த மணிகண்டன் (29), பர்கிட்மாநகரை சேர்ந்த கள்ளத்தியான் (25) ஆகியோர் சீமோலிடம் பணம், மீன் பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்