ஆப்பிரிக்கன் கெளுத்தி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு
பென்னாகரம் பகுதியில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டன.
பென்னாகரம்:
பென்னாகரம் நலப்பரம்பட்டி, சின்னப்பூ மரத்துபள்ளம், பூமரத்து பள்ளம் பகுதிகளில் பண்ணை குட்டைகளில் மீன்வள உதவி இயக்குனர் கோகுலரமணன், பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி தலைமையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது மாதையன், சண்முகம், செல்வம் ஆகியோர் பண்ணை குட்டைகளில் தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்கள் வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதே பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி மீன்களை கொட்டி அழித்தனர்.