மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு காசநோய் கண்டறிய 23 நடமாடும் எக்ஸ்-ரே வாகனங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்ட காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கு ஒரு நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாகனத்தை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மக்களை தேடி ஒவ்வொரு பகுதி வாரியாக சென்று காசநோய் கண்டறிய உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் திட்ட துணை இயக்குனர் தீனதயாள், டாக்டர் அருண்பாபு மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.