18-ந் தேதி முதல் 5 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும்

சீர்காழி ெரயில் நிலையத்தில் 18-ந் தேதி முதல் 5 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் என்று பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்

Update: 2023-07-11 19:00 GMT

சீர்காழி;

சீர்காழி ெரயில் நிலையத்தில் 18-ந் தேதி முதல் 5 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் என்று பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்.

சீர்காழி ரெயில் நிலையம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ெரயில் நிலையத்துக்கு தினமும் 40-க் ்கும் மேற்பட்ட ெரயில்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நெடுந்தூரம் செல்லும் ெரயில்கள் சீர்காழி ெரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் நிலை ஏற்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவடைந்த நிலையிலும் இரு வழி மார்க்கமாக ெரயில்கள் சீர்காழியில் நின்று செல்வதில்லை.மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் ெரயில் நிலையங்களில் இருந்து சீர்காழிக்கு வந்து சேர்வதற்கு உரிய நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்து சீர்காழி வந்தடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே சீர்காழி ரெயில் நிலையத்தில் முன்பு நின்று சென்ற அனைத்து ெரயில்களும் வழக்கம் போல் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

5 ரெயில்கள்

இந்தநிலையில் நேற்று சீர்காழி சட்டமன்ற அலுவலகத்தில் பன்னீர்செல்வம் எம். எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-கொரோனா காலத்தில் ஒரு வழி மார்க்கமாக நின்று சென்று கொண்டிருந்த 5 ெரயில்கள் இரு வழி மார்க்கமாக நின்று செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை சீர்காழி ெரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக செ.ராமலிங்கம் எம்.பி, மற்றும் நான்(பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.)திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு உள்ள ெரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து பல்வேறு மனுக்களை அளித்தோம்.

அந்தியோதயா விரைவு ெரயில்

இதன் விளைவாக தற்பொழுது இரு வழி மார்க்கமாக 5 ெரயில்கள் சீர்காழியில் நின்று செல்லும் என ெரயில்வே மேலாளர் ஹரிகுமார் தெரிவித்துள்ளார். அதன் நகலை ெரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் பெற்று வந்துள்ளனர். இனிவரும் காலங்களில் சீர்காழியில் நிற்காமல் செல்லும் அந்தியோதயா விரைவு ெரயில், சீர்காழியில் நின்று செல்ல ெரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளது. .கீழ்கண்ட ெரயில்கள் இனிவரும் காலங்களில் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும்.சென்னை - காரைக்கால் எக்ஸ்பிரஸ் (16175) , ராமேஸ்வரம்- சென்னை எக்ஸ்பிரஸ் (16752) , ராமேஸ்வரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் (16780), கன்னியாகுமரி -புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16862) , சென்னை எக்மோர்- தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் (16865) உள்ளிட்ட ெரயில்கள் வருகிற 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) முதல் சீர்காழியில் நின்று செல்லும். இவ்வாறு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்