தபால் துறையில் காலாவதியானஆயுள் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

தபால் துறையில் காலாவதியானஆயுள் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-27 18:45 GMT

தபால் துறையில் காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வருகிற நவ.30-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நீட்டிப்பு

இந்திய தபால் துறையின் அஞ்சல் ஆயுள் காப்பீடுகளில் முதலீடு செய்து உள்ளவர்கள் மற்றும் தொடர்ந்து பிரீமியம் செலுத்த தவறியவர்கள் காலாவதியான பாலிசிகளை சலுகை தொகையில் புதுப்பிக்க சிறப்பு முகாம் 1.6.2023 முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் இந்த முகாமானது 31.8.23 வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சிறப்பு முகாம் 30.11.23 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் 30.11.23 வரை தங்களது காலாவதியான பாலிசிகளை சலுகை தொகையில் பணம் செலுத்தி விடுபட்ட வருடங்களுக்கான முழு போனஸ் தொகையை பெறலாம்.

சலுகை தொகை

இந்த முகாமின் முலம் செலுத்தும் பீரிமியத் தொகையான ரூ.1 லட்சம் வரை உள்ள பாலிசிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வரை (25 சதவீதம்) தாமதக் கட்டணத்துக்கான சலுகை தொகை வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சத்து 1 முதல் ரூ.3 லட்சம் வரை பிரீமியம் உள்ள பாலிசிகளுக்கு ரூ.3 ஆயிரம் வரையும், ரூ.3 லட்சத்துக்கு மேல் பிரிமியம் தொகை பாலிசிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 500 வரை தாமதக் கட்டணத்துக்கான சலுகை தொகை வழங்கப்படுகிறது.

இந்த முகாம் தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெறும். ஆகையால் வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்