அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
புதூர்
அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
காலை உணவு திட்டம்
1-ம் வகுப்பு முதல் 5-்ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை திருக்குவளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மற்ற மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர். அதன்படி மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்.
அதன்படி சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம், தேனூர் பாலு ஆகியோர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் சாப்பிட்டனர். ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல், ஒத்தக்கடை முருகேஸ்வரி சரவணன், காதகிணறு செல்வி சேகர், புதுப்பட்டி இந்திரா அழகுமலை, நரசிங்கம் ஆனந்து, யானைமலை கொடிக்குளம் திருப்பதி, கருப்பாயூரணி மகேஸ்வரி, திண்டியூர் லட்சுமி சந்திரசேகர், ஆண்டார் கொட்டாரம் சீமான், பொதும்பு சாந்தி தனசேகரன், கருவனூர் தாமரைச்செல்வி மணிவண்ணன், கொடிமங்கலம் அழகு லட்சுமி ராமகிருஷ்ணன், செட்டிகுளம் பூங்கோதை மலைவீரன் உள்பட மதுரை மேற்கு கிழக்கு அனைத்து ஊராட்சிகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலவன், சோனா பாய், சுந்தரசாமி, உலகநாதன், துணைத்தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 9 தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். முடிவில் சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.
அதேபோல் தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் பூமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி, ஆசிரியர்கள் மகேஸ்வரி, கலைச்செல்வி, சுயஉதவிக்குழுவினர் விஜயலட்சுமி, லட்சுமி, பொன் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னாடிமங்கலம்
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். ஊராட்சி ஒன்றியஆணையர் கதிரவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.ஆறுமுகம், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பவுன்முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டி, துணைத்தலைவர் பாக்கியம் செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார். முடிவில் ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்.