தொல்பொருள் கண்காட்சி அரங்கம்

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியில் நடந்த அகழாய்வு தொல்பொருட்களை மக்கள் பார்வையிட கண்காட்சி அரங்கம் நேற்று திறக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2023-05-13 18:45 GMT

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியில் நடந்த அகழாய்வு தொல்பொருட்களை மக்கள் பார்வையிட கண்காட்சி அரங்கம் நேற்று திறக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

கண்காட்சி அரங்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் முதல் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன. இந்த அரங்குகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். கலெக்டர் ஜெயசீலன், தொல்லியல் துறை ஆணையர் காந்தி, துணை இயக்குனர் பொன் பாஸ்கர், எம்.எல்.ஏ.க்கள் அசோகன், சீனிவாசன், ரகுராமன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஜெயபாண்டியன், கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இலவச பஸ் வசதி

விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

அகழாய்வு மூலம் தமிழர்களுடைய பழங்கால நாகரிகத்தை உலகுக்கு சொல்ல வேண்டும். இந்த கண்காட்சியை பொதுமக்கள் எளிதாக வந்து பார்வையிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசமாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பார்வையிட்டு பழங்கால தமிழர்களின் நாகரிகங்கள், பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் அயல்நாடுகளுடன் வணிகம் செய்துள்ளனர். கடலில் கிடைத்த சங்குகளை பயன்படுத்தி அணிகலன்களை செய்துள்ளனர்.

விஜயகரிசல்குளம் பகுதியில் நடந்த அகழாய்விலும் கீழடிக்கு இணையாக பொருட்கள் கிடைத்துள்ளன. வைப்பாற்றின் கரையில் வாழ்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே தயார் செய்துள்ளனர். அதற்கு இங்கு கண்காட்சியில் இருக்கும் பழங்கால ெபாருட்களே சாட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

2-ம் கட்ட அகழாய்வு

அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- இங்கு நடந்த முதல் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், அரிய வகை கல்மணிகள், சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களிகள், காதணிகள், சக்கரங்கள், எடை கற்கள், முத்திரைகள் என பல்ேவறு பழங்கால பொருட்கள், யானை தந்தத்தால் செய்த பொருட்கள் கிடைத்துள்ளன.

தற்போது 2-ம் கட்ட அகழாய்வும் கடந்த மாதத்தில் தொடங்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் 3 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து 900 பொருட்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்