ஈரோட்டில் பரபரப்புவணிக வளாகத்தில் தீ விபத்து
ஈரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது
ஈரோடு சிவசண்முகம் வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் தரைதளத்தில் மின் மீட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த அறையில் இருந்து நேற்று மாலை 5 மணிஅளவில் திடீரென கரும்புகை வெளிவந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மின் இணைப்பை துண்டித்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.