சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு
சிலிண்டா் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் தெற்கு தெரு பகுதியில் வெள்ளச்சி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் வழக்கம் போல் வெள்ளச்சி வீட்டில் சமையல் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அவர் அலறி அடித்து கொண்டு வெளிேய ஓடி வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சிலிண்டரில் பரவிய தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.