தேவகோட்டை அருகே விஷம் தின்று வயலில் 10 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு தோகையை விற்பதற்காக கொன்றார்களா?

விஷம் தின்று வயலில் 10 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோகையை விற்பதற்காக கொன்றார்களா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2023-04-04 18:45 GMT

தேவகோட்டை

விஷம் தின்று வயலில் 10 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோகையை விற்பதற்காக கொன்றார்களா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இறந்து கிடந்த மயில்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). விவசாயி.

இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார். அப்போது அங்கிருந்து மர்ம நபர்கள் 2 பேர் தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த சேகர் அருகில் சென்று பார்த்தார்.

அங்கு 10 மயில்கள் இறந்து கிடந்தன. மேலும் மயில்களின் தோகை பிடுங்கப்பட்டு இருந்தது. தோகை ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தோகைக்காக கொன்றார்களா?

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நெல் மற்றும் அரிசியில் விஷம் கலந்து மயில்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

தோகையை விற்பதற்காக மயில்களை கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்