அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில்கிரிவலப்பாதை அடைக்கப்பட்டதால் பரபரப்பு

Update: 2023-07-03 19:30 GMT

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பகுதியில் தீபம் ஏற்றும் கிரிவலப்பாதை உள்ளது. இந்த பாதையின் குறுக்கே சிலர் தங்களது பட்டா நிலம் எனக்கூறி கிரிவலப்பாதையை கம்பி வேலி அமைத்து அடைத்து விட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியும் தடைபட்டது.

இதற்கிடையே கோவில் கிரிவலப்பாதை அடைக்கப்பட்ட பகுதியை உதவி ஆணையர் உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து கிரிவலப்பாதையை அடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் புகார் மனு கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்