அகழாய்வு கண்காட்சி அமைக்கும் பணிகள் தீவிரம்
அகழாய்வு கண்காட்சி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் கண்காட்சி நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் முதல்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்தப்பட உள்ளது. அகழ்வாராய்ச்சி தளத்தில் காட்சிப்படுத்துவதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் முதல் கண்காட்சி தொடங்க உள்ளதாக தொல்லியல் துறையினர் கூறினர்.